மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் உப தலைவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

faris photo– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: புனித நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்துலக முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் என்ற வகையில் புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

மட்டு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் உப தலைவரும், மட்டு மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் மேலும் பெருநாளை கொண்டாடும் அனைவரின் மீதும் சாந்தி சமாதானம் உன்டாவதாக

ஒரு நாட்டின் கலை,கலாசார,அரசியல்,பொருளாதார,பண்பாட்டு விழுமிய வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பு செய்கின்ற ஒரு படையணி இளைஞர் சமுதாயமாகும். என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அந்த வகையில் பெரு நாளாக இருத்தாலும் சரி ஏனைய நிகழ்வுகளாக இருத்தாலும் சரி அனைத்து நிகழ்வுகளையும் உயிர்ரோட்டமாக வைத்திருப்பவர்கள் நாங்களே இந் நன்நாளில் இளைஞர்களாகிய நாம் நாட்டின் சட்ட திட்டங்களைப் பேணி பிற சமயத்தவர்களின் உணர்வுகளையும் மதித்து நடந்து கொள்ள வேண்டியது நமது கடமையும் பொறுப்பாகும்.
இளைஞர் சமுதாயம் தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அச்சாணியாக இருக்க முடியும்.

இந்த வகையில் சமுக அபிவிருத்திப் பங்காளர்களான நாம் தமிழ், சிங்கள,முஸ்லிம் மற்றும் ஏனைய குழுக்களிடைய ஒன்றிணைப்பையும்,ஒற்றுமையையும் மேலோங்கச் செய்து தேசிய அபிவிருத்தியை நோக்கி காலடி எடுத்து வைக்கும் இக்காலகட்டத்தில் இப் புனித மிகு நோன்பு பெருநாள் இத் தேவைப்பாட்டினை பூர்த்தி செய்வதற்கு கிடைத்த பெருபேறு சந்தர்ரப்பமாகும் என்பது எனது கருத்தாகும்.

இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் இளைஞர்களிடமும் அன்பாக வேன்டிக்கொள்வது ரமழானில் நாம் கடைப்பிடித்தது போன்று பொறுமையையும் தியாகத்தையும் விட்டுகொடுப்பையும் எமக்குள் நாம் கடை பிடித்து எமது நாட்டில் என்றும் அமைதி நிலவ இறைவனை பிராத்தித்திக்குமாறு அன்பாய் கேட்டு இந்நாள் அனைத்துலக மக்களுக்கும் இனிய நாளாக அமைய வேன்டும்மென இறைவனை பிராத்தித்து மட்டு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் நிருவாக சபை சார்பாகவும், எங்களை சிறப்பாக வழி நடாத்திக் கொண்டிருக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டு பிராத்திய உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகள் அனைவரின் சார்பாக எனது பெருநாள் நல் வாழ்த்துக்களை மனப்பூர்வமான தெரிவித்து கொள்;கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment