காத்தான்குடி: ‘காஸாவில் முஸ்லிம்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் முஸ்லிம்கள் இந்த ஈகைத் திருநாளை வெறும் களியாட்டங்களுடன் கூடிய பெருநாளாக மாற்றிவிடக்கூடாது. காஸா முஸ்லிம்களது பாதுகாப்புக்காக, உலக முஸ்லிம்களது ஒற்றுமைக்காக இருகரமேந்தி அழ்ழாஹ்வை பிரார்த்திக்க வேண்டும்.’
இவ்வாறு ஸ்ரீ லங்கா ஹிறா பவுண்டேசன் மற்றும் அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி தனது நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில், அவர் மேலும் தெரிவிக்கையில், புனித நோன்பினை நோற்று வாழ்க்கையினை எமது இஸ்லாமிய மார்க்கத்துடன் மேலும் இறுக்கமாக்கி பன்பட்ட நிலையில் இருக்கின்ற நிலைமையில் எமது சகோதரர்களுக்கு இப்பெருநாள் செய்தியினை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
பலஸ்தீனம் காஸாவில் மக்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்ற நிலைமையில் முஸ்லிம்கள் தமது பூரணமான சந்தோசத்தினை வெளிப்படுத்தும் மனோ நிலையற்ற சூழ்நிலையில் இந்நோன்பு பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.
இறைவனை அஞ்சுவதனையும் இஸ்ரேலிய கொடுங்கோலாட்சிக்கு உதவியாகமைகின்ற உற்பத்திகளை புறக்கணிப்பதுடன் சுமூக வாழ்கைக்காக பிரார்த்திப்பதனையும் குறிக்கோளாகக் கொண்டு செயல் படுவது மாத்திரமே அந்த மக்களுக்கு நாம் செய்கின்ற பெரும் கைங்கரியமாகும்.
Published by

Leave a comment