புனித நோன்புப் பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் தொடர்பாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் விடுக்கும் அறிவித்தல்

kattankudy beachகாத்தான்குடி: நபிகளாரின் தூய ஸுன்னாவைப் பின்பற்றி பெருநாள் தொழுகைகளை திறந்த வெளியில் நிறைவேற்றிட வேண்டும் எனும் உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் உதவியினால் அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

இப்பணியினை பல ஆண்டுகளாக நாங்கள் சிறப்பாக மேற்கொள்வதற்கு பொதுமக்களாகிய நீங்கள் வழங்கிவருகின்ற ஒத்துழைப்பு மகத்தானது. இருந்தபோதிலும் தொழுகைக்காக உரிய நேரத்திற்கு வருகை தருவதில் ஒரு சிலர் தவறிவிடுகின்றனர் இதனால் தொழுகின்ற நேரத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய சங்கடமானதொரு நிலைக்கு நாங்கள் தள்ளப்படுகின்றேம்.

இதனால் நேர காலத்தோடு வருகை தந்து தொழுகைக்காக காத்திருக்கின்ற சகோதர, சகோதரிகளுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதை உணர முடிகின்றது.

அல்லாஹ்வின் தூதரை எமது உயிரை விடவும் மேலாக நேசிக்கும் நாம் அவர்களது ஸுன்னாஹ்வை தம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டவேண்டும். தொழுகை ஏற்பாட்டுப் பணிகளை பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் உங்களுக்காக ஏற்பாடு செய்திருக்க உரிய நேத்திற்கு சமுகம் தந்து மற்றொரு சகோதரன் தங்களின் வரவுக்காக காத்திருந்து சிரமப்படுவதை நீங்கள் தவிர்க்கலாம்தானே!

அத்துடன் ஸுன்னாவை நடைமுறைப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் மார்க்கத்தில் தெளிவில்லாத சிலர் இரண்டாம் மூன்றாம் ஜமாஅத்துக்கள் என நடாத்துவதற்கு தாமதமாகிவருகின்ற உங்கள் செயற்பாடு ஆதரவு வழங்குவதாக அமைந்துவிடும் அல்லவா?

அத்துடன் வரக்கூடிய சகோதரர்களில் பலர் தங்களுக்கான விரிப்புக்களைக் கொண்டு வராமல் வெறுங்கையுடன் வருவதை தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இறுதி நேரத்தில் வருகைதரும் உங்களைப் போன்றவர்களுக்கு பாய் விரிப்புக்களை ஏற்பாடு செய்வது எமக்கு சிரமமானதொன்றாகும் என்பதை கவனத்திற் கொள்ளவும். அத்துடன் கீழ்க்குறிப்பிடப்படும் விடயங்களையும் அவசியம் கவனத்திற் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

தொழுகைக்காக வரக்கூடிய சகோதர சகோதரிகள் கீழ்க்காணும் விடயங்கள் கவனத்திற் கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

1. வீதிப்பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடைமுறைகளை கண்டிப்பாக
கடைப்பிடிக்க வேண்டும்.

2. பெண்கள் அபாயா போன்ற இஸ்லாமிய அமைப்பிலான ஆடைகளை
மாத்திரமே அணிந்து வரவேண்டும். (இதற்கு மாற்றமான அலங்கார ஆடைகளுடன் வரக்கூடிய பெண்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர்)

3. வரும்போது வுழு செய்து கொண்டு தங்களுக்கான (முஸல்லா) பாய்,
விரிப்புக்களை கொண்டு வரவும்.

4. தொழுகை சரியாக காலை 6.15 மணிக்கு நடைபெறும்.

5. ஒரு தடவை மாத்திரமே ஜமாஅத் நடைபெறும்.

6. முதல் ஜமாஅத் முடிவுற்றதும் பல ஜமாஅத்துகள் நடாத்துவதை
கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளவும்.

7. தொழுகை முடிவடைந்ததும் நடைபெறும் குத்பாப் பிரசங்கத்தில்
அனைவரும் கலந்து கொள்ளவும்.

8. தொழுகை முடிவடைந்து கலைந்து செல்லும்போது ஆண் பெண் கலப்பு ஏற்படாதவாறு நடந்து கொள்ளவும்.

9. பிரசுரங்கள் வினியோகிப்பதற்கோ, வசூல்கள் மேற்கொள்வதற்கோ
எவருக்கும் அனுமதிக்கப்படமாட்டாது.

தொழுகைக்காக வருகை தருபவர்கள் மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளைக் கருத்திற் கொண்டு நடந்து கொள்ளுமாறும், தொழுகை ஏற்பாடுகளை சீராக மேற்கொள்ள எமக்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.

ஏற்பாட்டுக்குழு
இஸ்லாமிக் சென்றர் – காத்தான்குடி

Published by

Leave a comment