நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஸியாட் அவர்களின் நோன்புப் பெருநாள் செய்தி

shiyad siyad– எம். எச். எம். அன்வர்

காத்தான்குடி: முப்பது நாட்கள் நோன்பிருந்து தொழுகை ஸக்காத் திக்ரு ஸலவாத் மற்றும் குர்ஆன் போன்ற நல்லமல்கள் புரிந்து ‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்புப்பெருநாள் கொண்டாடும் என் இனிய இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு இதயம் கணிந்த புனித நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

பல்லின சமூகங்கள் வாழும் இந்த நாட்டில் சாந்தி சமாதானம் என்ரென்றும் நிலவவேண்டும் எனவும் முஸ்லிம்களாகிய நாங்கள் தன்மானத்துடனும், தலைநிமிர்ந்தும், சம உரிமையுடனும், சகவாழ்வுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிய அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

அதேபோல் நாம் இன்று கொண்டாடும் இனிய நன்நாளில் பலஸ்தீனில் வாழும் எமது உடன் பிறவா சகோதரர்கள் மிகவும் கஷ்டத்திற்கும் துன்பத்திற்கும் மத்தியில் அகதி முகாம்களிலும் பாதையோரங்களிலும் தஞ்சம் புகுந்து வாழ்கின்றனர். இவர்களுக்காக நாம் அதிகம் அதிகம் துஆ செய்வது எமது முக்கிய கடமையாகும்.

அல்லாஹ் இவர்களுக்கு விடிவை கொடுக்க வேண்டியுள்ளதோடு அவர்களுக்கு நிலையான சமாதானத்தை கொடுக்க மேலும் நானும் நீங்களும் இனிய நன்நாளில் மீண்டும் ஒருமுறை பிரார்த்திப்போம்

-ஈத் முபாறக்-
எம்.எஸ்.எம்.ஸியாட்
நகர சபை உறுப்பினர்
காத்தான்குடி

Published by

Leave a comment