எதிரிகளைக் கொன்று தலைகளை  கம்பங்களில் நட்ட இஸிஸ் அமைப்பின் மற்றுமொரு கொடூரம்!

isis (2)– AF-90

டமஸ்கஸ்: ஈராக்கை ஆட்டிப்படைத்து வரும் இஸிஸ் சிரியாவில் தாங்கள் பிடித்து வைத்துள்ள ரக்கா நகரில், தங்களால் கொல்லப்பட்ட 50க்கும் மேற்பட்ட சிரியா ராணுவ வீரர்களின் தலைகளை தனியாக கொய்து அவற்றை கம்புகளிலும், மின் கம்பங்களிலும் சொருகி வைத்துள்ள வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரிய ராணுவ தளத்திற்குள் புகுந்து இந்த வீரர்களை அவர்கள் கொலை செய்து தலைகளை மட்டும் தனியாக துண்டித்து கம்பங்களில் சொருகி வைத்துள்ளனர்.

ரக்கா என்ற நகரில் உள்ள சிரிய ராணுவ முகாமை இவர்கள் கைப்பற்றியபோது அங்கிருந்த 85 வீரர்களைக் கொலை செய்துள்ளனர். மேலும் 200 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அனேகமாக அவர்களும் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 50 வீரர்களைக் கொன்று அவர்களின் தலையை தீவிரவாதிகள் துண்டித்திருக்கலாம் என்று சிரியா கூறியுள்ளது.

isis (2)

இந்த வீடியோவின் பின்னணியில்  இஸிஸ் உறுப்பினர் ஒருவரின் குரல் இடம் பெற்றுள்ளது. தலைகளை தனித் தனியாக கம்பங்களில் சொருகி வைத்துள்ள காட்சியும் வருகிறது.

ஒரு புகைப்படத்தில் சிரியாவில் கைப்பற்றிய கட்டடம் மீது  இஸிஸ் உறுப்பினர் ஒருவர் கருப்புக் கொடியுடன் காட்சி தருகிறார்.
இன்னொரு படத்தில் சிரிய அதிபர் பஷர் அல் அஸ்ஸாத்தின் புகைப்படத்தை எரிக்கும் காட்சி உள்ளது.

isis

வீரர்களின் தலைகளைக் கொய்து தனியாக கம்பங்களில் சொருகி வைத்துள்ள செயல் ரக்கா நகர மக்களுக்கு தீவிரவாதிகள் விடுத்துள்ள எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. தாங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவே கூறப்படுகிறது.

ஆரம்பத்திலிருந்தே இஸிஸ் அமைப்பிற்கு உலகெங்கிலும் இருந்து பல எதிர்ப்புக்கள் வந்துகொண்டிருக்கும் இந்நிலையில், தற்பொழுது மேலும் பல விமர்சனங்களை இந்த வீடியோ ஏற்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment