ஷவ்வால் பிறை பார்த்தல்: அ.இ.ஜ.உ. சிலரின் சொந்தப்புத்திக்கு செயற்படக்கூடாது!

acju– ஏ. அப்துல் ஹமீட்

கொழும்பு: கடந்த வருட ரழழான் நோன்பு, இம்முறை ரமழான் போன்றுதான் உலக நாடுகள் எங்களிலும் தலைநோன்பு ஒன்றாகப் பிடித்து நோன்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிறை மோசடியின் பின்னர் நோன்புப் பெருநாள் மறுதினமே இலங்கையில் கொண்டாட வேண்டும் என அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா அறிவித்திருந்தது.

கடந்த வருடம் கிண்ணியாவில் பிறை கண்டவிடயம் உண்மைப்படுத்தப்பட்ட தெளிவான ஆதாரங்கள் இருந்தும், அதைவிட கிண்ணியா ஜம்மிய்யத்துல் உலமா தனது உத்தியோகபூர்வ ‘லெட்டர் ஹெட்’ யில் தொலைநகல் அனுப்பியும், பல தில்லுமுள்ளுகளை மேற்கொண்டது அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா.

இலங்கை பிறை வரலாற்றில் அதிகமாக கிண்ணியா, மன்னார், புத்தளம் மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் பிறைகாண்பது வழக்கமாக இருந்து வருகிறது. இப்பிரேதேசங்களில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா பிறைக் குழுவினரை அனுப்பும்போது இலங்கையில் பிரதானமாகப் பேசப்படும் சிங்கள, தமிழ் மொழி அறிந்தவர்களை அனுப்ப வேண்டுமே தவிர, நாலுபேர் பேசும் ஜாவா, போரா மொழிகளைப் பேசுபவர்களை அனுப்பக்கூடாது.

கடந்த வருடம் ஏற்பட்ட திட்டமிட்ட பிறை மோசடியில், குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் மொழி தெரியாதவர்களை அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா அனுப்பிவைத்திருந்ததும் பாரிய தவறாகும்.

ஷவ்வால் பிறை உத்தியோகபூர்வமாகக் கண்ட பின்னரும், நோன்பைத் தொடருமாறும், நோன்பை விட்டவர்கள் கழாச் செய்யுமாரும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்ஹ் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்தி இலங்கை வானொலியில் மக்களைக் கேட்டிருந்தார்.

இதன் பின்னர் கொழும்பு ஜம்மிய்யத்துல் உலமாவுக்குள் சில முரண்பாடுகளும், குழப்பங்களும் கிண்ணியா பிறைவிடயத்தில் ஏற்பட்டது. இதன்காரணமாக இது ஜம்மிய்த்தில் உலமாவின் தீர்மானமல்ல எனவும், ஓரு சிலரது தவறான நிலைப்பாட்டால் வந்த பிரச்சினையே எனவும் பின்னர் அறியவந்தது.

எனவே, மேற்படி குழப்பங்கள் இம்முறையும் நிகழாமல் பிறை விடயத்தில் அதிக கவனம் செலுத்துவதும், தனிப்பட்டவர்களது சுய விருப்பு வெறுப்புக்கு அப்பால் தனித்து நின்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செய்படுவதும் கட்டாயமாகும்.

Published by

One response to “ஷவ்வால் பிறை பார்த்தல்: அ.இ.ஜ.உ. சிலரின் சொந்தப்புத்திக்கு செயற்படக்கூடாது!”

  1. அன்பிக்குரிய சவுதி பிறைக்காரர்களே!
    நீங்கள் பெருநாள் கொண்டாடுவது சவுதி பிறையைக் கொண்டே தவிர சர்வதேச பிறையினை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
    சர்வதேச பிறைதான் என்றால் – உலகின் மிகப் பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேஷியாவில் பிறை கண்டால் இலங்கை நேரப்படி பி.ப 04.30 மணிக்கு அறியக் கிடைக்கும். இதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்ள முடியும் என்பதோடு முன் கூட்டியே றமழானையும் பெருநாளையும் தீர்மாணிக்க முடியும்.
    ஆனால் மேற்படி முறையினை பொருட்படுத்தாமல் இரவு 08.30 மணிக்கு சவுதிக்கு தொலைபேசி எடுத்து பிறை கண்டதா? பிறை கண்டதா? பிறை கண்டதா? என்று அலைவதனையே காண்கிறோம்.
    கிண்ணியா – கிண்ணியா பிரதேச வாசிகளும் புத்தளம் பிரதேசத்தினரும் ஒவ்வொரு வருடமும் 29 நோன்பு நோற்றவுடன் பிறை காண்பதும் பெருநாள் அனுஷ்டிப்பதும் வழமை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த வருடம் மாத்திரம் புதியது அல்ல என்பதனை அறிந்துகொள்ள வேண்டும்.
    யா அல்லாஹ் எம் அனைவரையும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படக்கூடிய சமுகமாக வாழச்செய்வாயாக.

Leave a reply to mohmedrislan Cancel reply