மொசுல் நகரின் மிகப்பழமை வாய்ந்த நபி ஜோனா பள்ளிவாயல் இஸிஸ் அமைப்பினால் தகர்ப்பு!

iraq (2)– MJ

பக்தாத்: ஈராக்கின் மொசுல் நகரில் அமைந்துள்ள மிகப்பழமை வாய்ந்த நபி யூனுஸ் (அலை) அவர்களுடைய பள்ளிவாயல் இஸ்லாமிய போராளிகள் என தங்களை அடையாளப்படுத்திவரும் இஸிஸ் அமைப்பினால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

கி.மு. 8வது நூற்றாண்டில் அதாவது நபி ஈஸா (அலை) பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விடத்தில் கட்டப்பட்டிருந்த நபி ஜோனா (நபி யூனுஸ் -அலை) (Prophet Jonah / Prophet Younis) என அழைக்கப்படும் இப்பள்ளிவாயலும் இவ்விடமும், மொசுல் நகரில் இஸ்லாமிய வரலாற்றையும் நாகரிகத்தையும் உலகுக்குப் பறைசாற்றும் ஓர் புனித இடமாக இருந்துவந்தது.

iraq (2)
நபி யூனுஸ் (அலை) அவர்களது வரலாற்றுக்கு அத்தாட்சியா அமைந்த நபி ஜோனா பள்ளிவாயல்

நபி யூனுஸ் (அலை) அவர்களது காலத்தலிருந்து நேற்றுவரை இஸ்லாமிய சின்னமாக இருந்துவந்த இப்பள்ளிவாயல் இன்று தகர்க்கப்பட்டிருப்பதானது உலக முஸ்லிம்களை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

மிருகங்களைவிடவும் மோசமாக இஸ்லாத்தின் பெயரால் நேற்று உருவாக்கப்பட்ட இஸிஸ் அமைப்பின் செயற்பாடுகள் இருந்துவருவதாக உலக மக்கள் தங்களது கருத்துக்களை கவலையுடன் தெரிவித்து வருகின்றனர்.

iraq
கி.மு. 8ம் நூற்றாண்டின் நபி யூனுஸ் (அலை) அவரகளின் பள்ளவாயல் உடைக்கப்படுவதற்கு சுமார் ஒருவாரத்திற்கு முன்

1990 காலப்பகுதியில் ஈராக்-அமெரிக்காவின் கூட்டுப்படையினரின் குண்டு வீச்சுக்கு இலக்கான போது, குறித்த பள்ளிவாயலும் சிறிதளவு சேதமடைந்திருந்தது. இதன் பின்னர் முன்னாள் ஈராக்கின் ஜனாதிபதி சதாம் ஹூஸைன் இப்பள்ளிவாயலை மீள் புணர்நிர்மானம் செய்தார்.

இஸ்லாமிய வரலாற்றுச் சான்றாக மாத்திரமன்றி, நபி யூனுஸ் அலை அவர்களது வரலாறு பைபிளிலும் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக இப்பள்ளிவாயலையும், அதனைச் சூழவுள்ள பிரதேசங்களையும் பார்வையிட உலகெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மஸ்ஜிதுல் ஜோனாவுக்கு வருகை தருகின்றனர்.

Isis militants have blown up the Mosque of the Prophet Younis, or Jonah, in Mosul
இஸிஸ் தீவிரவாதத்தின் வெளிப்பாடு-உடைக்கப்பட்ட பின்னர் நபி ஜோனா பள்ளிவாயல்

குர்ஆனின் அத்தாட்சிக்கு எடுத்துக்காட்டும் முகமாக அமைந்து வந்த மிகப்பெரும் பழமைவாய்ந்த பள்ளிவாயல் தற்பொழுது தகர்க்கப்பட்டிருப்பது வேதனையிலும் வேதனையே!

Published by

Leave a comment