காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (2014.07.24) வைத்திய அத்தியட்சகர் Dr. T. கௌரிசங்கரன் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந் நோன்பு திறக்கும் நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் துணை மருத்துவ சேவை உத்தியோத்தர்கள் சிற்றூழியர்கள் கலந்து கொண்டதுடன் வைத்தியசாலை அபிவிருத்துக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்தார் சொற்பொழிவினை பிஸ்மி குர்ஆன் பாடசாலையின் விரிவுரையாளர் அஷ்ஷெய்ஹ் MSM.நுஸ்ரி (நளீமி) BA அவர்கள் இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான நோன்பு உடல் ஆரோக்கியம், சுகாதாரம் போன்றவற்றிற்கு எவ்வாறான பங்களிப்புக்களைச் செய்கின்றது மற்றும் சமுகத்தில் அதன் முக்கியத்துவம் பற்றியும் சிறப்புச் சொற்பொழிவொன்றினை மேற்கொண்டார்.
Published by




Leave a comment