முதியோர்கள் மற்றும் விதவைகளுக்கான றமழான் ஸகாத் உலர் உணவு விநியோக நிகழ்வு

ramadan 2014– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி -01 வடக்கு ,167 ஏ ,ஸம் ஸம் முதியோர் அமைப்பினால் முதியோர்கள் மற்றும் விதவைகளுக்கான றமழான் ஸகாத் உலர் உணவு விநியோக நிகழ்வு புதிய காத்தான்குடி பதுறியா வீதியிலுள்ள ஸம் ஸம் முதியோர் அமைப்பின் தலைவரின் இல்லத்தில் 24-07-2014 வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

ஸம் ஸம் முதியோர் அமைப்பின் தலைவர் எம்.எச்.எம். அபூ காசிம் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்;ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டார்.

இதன் போது முதியோர்கள் மற்றும் விதவைகளுக்கான றமழான் ஸகாத் உலர் உணவு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரி,காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி.எஸ்.சிவநாயகம் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

gift rice

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரி,காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி.எஸ்.சிவநாயகம், ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் இணைப்பாளர்களான பி.டி.எம்.பாரூக் ஜேபி,டி.எல்.எம்.குறைஷ் ,மௌலவி பௌஸ் பலாஹி ,ஸம் ஸம் முதியோர் அமைப்பின் செயலாளர் ஹூஸைன் உட்பட ஊர் பிரமுகர்கள், ,ஸம் ஸம் முதியோர் அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ramadan 2014

இங்கு 223 பேருக்கு றமழான் ஸகாத் உலர் உணவு விநியோகம் செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) தெரிவித்தார்.

ramadan shibly

Published by

Leave a comment