‘ஜனாதிபதி கிளஸ்கோவுக்கு வராவிட்டாலும் தமது எதிர்ப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்’

glasgowலண்டன்: ஸ்கொட்லாந்தின் கிளஸ்கோ நகரில் நடக்கின்ற 20-வது கொமன்வெல்த் விளையாட்டு விழாவில் கொமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பதவியை வகிக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ள மாட்டார் என்று ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்கான பயண ஏற்பாடுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கவில்லை என்றும் ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, மகிந்த ராஜபக்ஷ கிளஸ்கோ விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரிட்டனிலுள்ள இலங்கைத் தமிழ் அமைப்புகள் கிளஸ்கோ நகரில் போராட்டம் ஒன்றையும் இன்று நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிளஸ்கோவுக்கு வராவிட்டாலும் தமது எதிர்ப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்று தமிழ் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். உலகெங்கிலுமிருந்து சுமார் 4500 விளையாட்டு வீரவீராங்கனைகளும் ஆயிரக்கணக்கான விளையாட்டு ரசிகர்களும் கிளஸ்கோ நகரை வந்தடைந்துள்ளனர்.

Published by

Leave a comment