ஹமாஸின் ரொக்கட் தாக்குதல்களையடுத்து,  இஸ்ரேலுக்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விமானங்கள் இடைநிறுத்தம்!

ben-gurion-airport[1] israel– MJ

டெல் அவிவ்: இஸ்ரேலின் Bபென் கூரியன் விமானநிலையத்துக்கு ஒரு மைல் தூரத்திற்கு அப்பால் ஹமாஸ் ஏவிய ரொக்கட்டுக்கள் விழுந்து வெடித்ததன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விமானங்கள் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவின் எஃப்.ஏ.ஏ, டெல்டா மற்றும் அமெரிக்கன் எயார்வேய்ஸ் ஆகிய அமெரிக்க விமானங்களும், லுஃப்தன்ஸா, கே.எல்.எம். மற்றும் எயார் பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய விமானங்களும், சற்று முன்னர் தங்களது சேவையை இடைநிறுத்தியிருக்கின்றன.

‘இஸ்ரேல் விமான நிலையம் விமானங்கள் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் மிகுந்த பாதுகாப்பிலேயே இருக்கின்றது. எனவே நிறுத்தப்பட்ட விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை ஆரம்பிக்கு’மாறு இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சு குறித்த விமான நிறுவனங்களிடம் வேண்டுகோளை விடுத்திருக்கின்றது.

‘இப்படியொரு பாதுகாப்பு Bபெண் கோரியன் விமான நிலையத்தில் இருக்கையில், அமெரிக்கா ஏன் தங்களது விமான சேவைகளை இஸ்ரேலுக்கு இடைநிறுத்தி இருக்கின்றது என்பதில் தங்களுக்கு ஆச்சரியமாகவே இருக்கின்றது’ எனவும் இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ben-gurion-airport[1] israel

Published by

Leave a comment