மொசூல்: ஈராக்கின் மொசூல் நகரில் 1,800 ஆண்டு கால பழமையான தேவாலயத்தை இஸிஸ் போராளிகள் எரித்து தீக்கிரையாகி உள்ளனர். ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போரை சுன்னி முஸ்லிம்களின் பிரிவான இஸிஸ் நடத்தி வருகிறது.
ஈராக்கின் பெரும்பாலான நகரங்களைக் கைப்பற்றிய சுன்னி முஸ்லிம்கள், ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களையும் நிர்மூலமாக்கினர். இதனைத் தொடர்ந்து மொசூல் நகரில் இருக்கும் கிறிஸ்தவர்கள் ஒன்று இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும், அல்லது சிறப்பு வரி செலுத்த வேண்டும்.. இரண்டும் செய்யாவிட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில், மொசூல் நகரில் இருந்த 1,800 ஆண்டுகால பழமையான தேவாலயத்தை அதாவது நபி (ஸல்) அவர்களது காலத்துக்கு முற்பட்ட மிகப்பழமைவாய்ந்த தேவாலயத்தை இஸிஸ் அமைப்பினர் தீக்கிரையாக்கியுள்ளர்.
Published by



Leave a comment