ஜெரூஸலம்: காஸாவில் தொடரும் இஸ்ரேலின் கொடூரமான வான்தாக்குதல் காரணமாக காஸா மருத்துவமனை தாக்கப்பட்டது. இத்தாக்குதலில் காயம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் ஷஹீதானதுடன், 70 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள்.
திங்கட்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதலில் 5 சிறுவர்கள் உட்பட 44 பேர் ஷஹீதாகியுள்ளனர். ஹமாஸின் தாக்குதலில் 7 இஸ்ரேலிய இராணுவத்தினர் நேற்று திங்கட்கிழமை கொல்லப்பட்டிருக்கின்றனர்.
கடந்த 3 தினங்களில் ஹமாஸின் தாக்குதலில் 27 இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களுள் 25 இராணு வீரர்களும், இரண்டு பொதுமக்களும் என இஸ்ரேல் உறுதிப்படுத்தி இருக்கின்றது.
இருவாரங்களாகத் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் மாத்திரம் 550 காஸா மக்கள் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சம்பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேல் படைவீரர்கள் கொல்லப்படுவதைத் தாங்க முடியாத அமெரிக்காவும், ஐ.நாவும், தற்பொழுது இருதரப்பின் யுத்த நிறுத்தத்திற்காக வாய்திறந்திருக்கின்றன. எனினும் இஸ்ரேல் தொடர்ந்தும் காஸா மீது தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது.
‘அல்லாஹ்வின் உதவியே எங்களுக்குப் போதுமானது’ என ஹமாஸ் தொடர்ந்தும் காஸாவுக்குள் ஊடறுக்கும் இஸ்ரேல் இராணுவத்தை எதிர்த்து போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment