காஸா பள்ளிவாயல்களில் இஸ்ரேலிய குண்டுவீச்சு!

gazaகாஸா: காஸாவில் இஸ்ரேல் தனது குண்டுவீச்சுக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. திங்கள் இரவு பள்ளிவாசல்கள், விளையாட்டு கூடங்கள் உட்பட எழுபதுக்கும் அதிகமான இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

காஸா சென்ற தமது படைவீரர் ஒருவரைக் காணவில்லை என்பதை உறுதிசெய்த இஸ்ரேலிய இராணுவம், அவர் இறந்துவிட்டார் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்குள்ளாகி ஆறுபேர் கொல்லப்பட்ட கவச வாகனத்தில் இவரும் இருந்தனர் என்று இஸ்ரேல் கூறுகிறது.

இதுவரையில் இஸ்ரேலிய படைத்தரப்பில் 27 பேரும், இஸ்ரேலிய சிவிலியன்கள் 2 பேரும் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் கிட்டத்தட்ட 600 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை இதுவரையில் மட்டுமே 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு தொடர்ந்தும் ஹமாஸ் பதிலடி கொடுத்துவருகிறது.

Published by

Leave a comment