அன்று பிறக்காத 10 வீரர்களைக் கொண்ட தற்போதய இந்திய அணிக்கு 28 வருடங்களுக்குப்பின்  லோர்ட்ஸ் வெற்றி! 

india cricket– AF-90

லண்டன்: லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. புதிய வரலாறு படைத்துள்ள இந்த வெற்றிக்கு வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

அபாரமாக பந்து வீசிய அவர் 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட்களைச் சாய்த்து இங்கிலாந்தை நிலை குலைய வைத்தார்.இப்போட்டியில் 95 ஓட்டங்கள்வித்தியாசத்தில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற முன்னிலையைப் பெற்றது.

கடைசியாக லோர்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1986ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

மேலும் 2011ம் ஆண்டுக்குப் பிறகு அந்நிய மண்ணில் இந்தியா வென்றுள்ள முதல் டெஸ்ட் வெற்றியும் இதுவேயாகும்.

1986ஆம் ஆண்டு இந்தியா லோர்ட்ஸ் மைதானத்தில் வெற்றிபெற்றபோது தற்போதைய இந்திய அணியின் 10 வீரர்கள் பிறந்திருக்கக் கூட இல்லை என்பது சுவாரஸ்யமானது. கிட்டத்தட்ட 3வது தலைமுறை இந்திய வீரர்கள்தான் மீண்டும் ஒரு வெற்றியை ரோர்ட்ஸ் மைதானத்தில் சுவைத்துள்ளனர்.

india cricket

Published by

Leave a comment