காங்கேயனோடை: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தமது இப்தார் நோன்பு திறக்கும் விஷேட நிகழ்வுகளின் வரிசையில் காங்கேயனோடை பிரதேசத்தில் இப்தார் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
காங்கேயனோடை மஸ்ஜிதுல் பத்ர் ஜும்ஆ பள்ளிவாயலில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்விற்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ALM.சபீல் நளீமி தலைமை தாங்கி உரையாற்றினார்.
அத்துடன் நிகழ்வில் அஷ்ஷெய்க் MSM. நுஸ்ரி நளீமி விஷேட உரையொன்றினை ஆற்றினார்.
நிகழ்வில் பிரதேச மக்கள், உலமாக்கள், கல்விமான்கள், PMGGயின் சூறாசபை உறுப்பினர்கள், காங்கேயனோடை பிரதேச செயற்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காங்கேயனோடை பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by





Leave a comment