வாசகர்களை மடையர்களாக்கும் தந்திரங்கள்

plane (5)– MJ

கொழும்பு: மலேசிய விமானம் எம்.எச் 17 உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் உலகமறிந்த விடயம். குறித்த விமானம் தீப்பற்றி புகையுடன் விழும் ஒளிப்பதிவு ஒன்றையே தற்பொழுது உலக முன்னணி தொலைக்காட்சி ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன. எனினும் இவ் ஒளிப்பதிவில் ஒரு துளியளவேனும் விமானத்தைக் காண முடியாது.

இந்நிலையில், சில ஊடகங்களும், முகநூல் பக்கங்களும் விமானம் ஆகாயத்திலிருந்து பூமியில் வீழ்ந்து நொருங்கும் பழைய ஒளிப்பதிவைப் பதிவேற்றி, இதுதான் மலேசிய விமானம் எம்.எச். 17 விழும் காட்சி என பதிவேற்றி வாசகர்களை மடையர்களாக்கி வருகின்றனர்.

இவர்கள் தற்பொழுது பதிவேற்றி இருக்கும் காட்சி, யு.எஸ். 747 அமெரிக்காவின் கார்கோ விமானம் வெடித்துச் சிதரும் காட்சியாகும். இது 30-04-2013 அன்று யுரியூப்பில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. இதன் உண்மை நிலையை அறிந்தும், வாசகர்களை மடையர்களாக்கும் முகமாக இந்தப் பதிவை எம்.எச.17 என்பதாக திரிபு படுத்தி வெளியிட்டிருக்கின்றனர்.

இந்தப் போலிச் செய்திகளைக் காண தங்களது பக்கங்களை லைக் செய்யவும் என்றும் வாசகர்களை மடையர்களாக்கி வருகின்றனர். ஏமாற்றமடைந்த அப்பாவி வாசகர்கள் பல லைக்களை கொடுத்து, முகநூலில் ஷெயார் செய்தும் வருகின்றனர்.

இதேபோல் கடந்த மார்ச் மாதம் மாயமான எம்.எச்.370 விமானம் கடலில் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக இதேபோல் ஒளிப்பதிவு பதிவேற்றப்பட்டு, பலரை இதுபோன்றவர்கள் மடையர்களாகி இருந்ததும் வரலாறு.

உண்மை எது பொய் எது என்றும் தெரிந்தும், அல்லாஹ் எமக்கருளிய பெரு நிஃமத்துக்களுள் ஒன்றான சிந்தனையை அடகுவைத்துவிட்டு, இந்தப் பதிவுகளை லைக் செய்தும் நூற்றுக் கணக்கில் முகநூலில் ஷெயார் செய்தும் வருகின்றனர் எமது சகோதரர்கள்.

அதைவிட ‘மாஷா அல்லாஹ்’, ‘சுப்ஹானல்லாஹ்’ என்றெல்லாம் இடுகைகளையும் இட்டு, நாங்கள் மடையர்களாகிவிட்டோம் என்பதை உறுதிப்படுத்தியும் வருகின்றனர் எம்மவர்கள்.

பொய் என்று தெரிந்தால் பொய் என்று உரியவர்களுக்கு அறியப்படுத்துங்கள். அவர்கள் திருந்தாவிட்டாலும், முகநூல் அப்பாவிகளாவது உண்மையை அறிந்துகொள்ள வழிவகுக்கும்.

யு.எஸ். 747 அமெரிக்காவின் கார்கோ விமானம் வெடித்துச் சிதரும் காட்சி

Published by

Leave a comment