லண்டனில் 15,000 க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட இஸ்ரேலுக்கு எதிரான பிரமாண்டமான கண்டனப் பேரணி! (கானொளி)

gaza– MJ

லண்டன்: நேற்று சனிக்கிழமை லண்டனில் இஸ்ரேலுக்கு எதிராகவும், காஸா மக்களுக்கு ஆதரவாகவும் இடம்பெற்ற பிரமாண்டமான கண்டனப் பேரணியில் 15,000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் காரியாலயம் அமைந்திருக்கும் டவ்னிங் வீதியிலிருந்து, இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள கென்சிங்டன் வரை இப்பிரமாண்டப் பேரணி சென்றது.

புனித ரமழான் நோன்பை நோற்ற ஆயிரக்கணக்கான உலக முஸ்லிம்களுடன், முஸ்லிம் அல்லாத பல்லின நாட்டவர்களும் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக இப்ரிரமாண்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.

gaza

‘இஸ்ரேல் உடனடியாக யுத்தத்தை நிறுத்த வேண்டும்’

‘காஸா மக்களுக்கு விடுதலை வேண்டும்’

‘குழந்தைகளையும், சிறுவர்களையும் கொன்று குவிக்கும் இஸ்ரேல் சர்வதேசத்துக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்’

போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், இஸ்ரேலால் கொலை செய்யப்பட்ட மக்களது படங்கள் தாங்கிய பதாதைகளும் மக்களால் எடுத்துச் செல்லப்பட்டன.

இவ் ஆர்ப்பாட்டம் தற்பொழுது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment