‘இஸ்லாத்தை ஏற்கவும், வரி செலுத்தவும்- இல்லாவிட்டால் மரண தண்டணைக்குத் தயாராகுங்கள்’ -இஸிஸ்

iraq– SHM

மொசூல்: ஈராக்கில் தங்களது கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். கெடு விதித்துள்ளது.ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய நகரங்களை இணைத்து தனி இஸ்லாமிய நாடு பிரகடனப்படுத்தியுள்ளனர்.

தற்போது தங்களது பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு கடும் நிபந்தனைகளையும் கட்டுப்பாட்டையும் ஐ.எஸ்.ஐ.எஸ். விதித்துள்ளது.

கிறிஸ்தவர்கள் அனைவரும் இஸ்லாம் மதத்துக்கு மாறவேண்டும்; சிறப்பு வரி செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மரண தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

isis iraq

இதை அங்குள்ள பள்ளிவாயல்களில் நேற்று ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர். இதனால் அச்சம் அடைந்த கிறிஸ்தவர்கள் மொசூல் உள்ளிட்ட நகரங்களில் இருந்து குடும்பங்களுடன் வெளியேறினர்.

வெளியேறிய கிறிஸ்தவர்கள் குர்தீஷ் மாகாணத்தில் உள்ள கோஹீக், அர்பில் நகரங்களுக்கு அகதிகளாக சென்றனர்.

iraq

 

Published by

Leave a comment