இஃதிகாபில் ஆர்வம் காட்டும் முஸ்லிம்கள்

ihthikaf– MJ

றியாத்: புனித மாதமான ரமழானில் புனித மிக்க இரவான லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்ளும் முகமாக உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் தங்களது இடங்களில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாயல்களில் இஃதிகாப் இருந்து வருகின்றனர்.

‘ரமழானின் இறுதிப்பத்தில் வரும் ஒற்றை நாட்களில் லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்ளுங்கள்’ எனும் நபி (ஸல்) அவர்களது வழிகாட்டலுக்கு அமைய இன்று உலகம் முழுவதிலுமுள்ள ஆர்வமுள்ள முஸ்லிம்கள் பள்ளிவாயல்களில் இஃதிகாப் இருந்து வருகின்றனர்.

றியாத் நகரில் மன்னர் ஹாலித் பள்ளிவாயல் மற்றும் அல் ராஜி பள்ளிவாயலிலும் ஆண்கள், பெண்கள் இஃதிகாப் இருப்பதற்கான பாரிய ஏற்பாடுகள் வழமை போல் செய்யப்பட்டிருக்கின்றது.

‘இஃதிகாப் எந்தப் பள்ளிவாயலிலும் இருக்க முடியும். ஜூம்ஆ பள்ளிவாயல்களில் மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது’ என சவுதி அரேபியாவின் சிரேஷ்ட முப்தி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

ihthikaf
மஸ்ஜிதுல் ஹரமில் இஃதிகாப் இருப்போர்

‘அல்லாஹ்வின் ஆலயமான மக்கா மற்றும் மஸ்ஜிதுன் நபவி ஆகியவற்றிலும் இஃதிகாப் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மக்கா ஹரத்திற்குரிய வரையறுக்கப்பட்ட விதி முறைகள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படும்’.

‘குடும்பத்தினருடன் இஃதிகாப் இருப்பவர்கள் தங்களது மனைவிமார் மற்றும் பிள்ளைகள் விடயத்தில் கவனம் செலுத்துமாறும், பெண்கள் 3 அல்லது நான்கு சோடி உடுபிடவைகளும், மேலதிகமாக அபாயா, ஹிஜாப் ஆடைகளையும் எடுத்து வரவேண்டும் எனவும் முப்தி அப்துல் அஸீஸ் தெரிவத்தார்’.

ramadan (2)
லண்டன் பள்ளிவாயலில் இஃதிகாப் இருப்போர்

‘மஸ்ஜிதுன் நபவியில் இம்முறை ஆண்களும் பெண்களும் உட்பட 14,000 பேர் இஃதிகாப் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஸ்ஜிதுல் நபவியில் இஃதிகாப் இருப்பதற்கு இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்தவர்களுக்கு இரட்டைச் சலுகைகளும், கவனிப்புக்களும் வழங்கப்படும் எனவும் முப்தி அப்துல் அஸீஸ் மேலும் கூறினார்’.

காத்தான்குடியிலும், சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக குறிப்பிட்ட ஜூம்ஆ பள்ளிவாயல்களில் இஃதிகாப் வழமை போன்று மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. வேலைப்பழு உள்ளவர்கள் இரவிலிருந்து ஃபஜ்ர் தொழுகை வரைக்கும் தங்களது வசதிகளுக்கு ஏற்ப இஃதிகாப் அமல்களில் ஈடுபட்டு வருவதையும் காணமுடிகிறது.

ramadan
லண்டன் பள்ளிவாயலில் இஃதிகாப் இருப்போர்

Published by

Leave a comment