குலசேகரம்: ஃபேஸ்புக் காதலுடன் ஓடிய பெண், காதல் கசந்ததால் திரும்ப வீடு திரும்பினார். ஆனால் பெற்றோர் ஏற்க மறுத்ததால் பரிதவித்து வருகிறார். இந்தியாவில் திருவட்டாறு அடுத்துள்ள வடக்கநாடு பகுதியை சேர்ந்தவர் அட்வின் சார்மி. பி ஏ பட்டதாரி. குளச்சல் பகுதியை சேர்ந்தவர் சிபு. சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் இவருக்கும் ஃபேஸ்புக் வழியாக அறிமுகம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையறிந்த அட்வின்சார்மியின் பெற்றோர் அவரிடம் படிபபு முடிந்ததும் அந்த வாலிபருக்கே திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர்.
இதனை ஏற்காத மகள் தனது காதலுடன் கடந்த 4 ஆம் தேதி மாயமாகி விட்டார். காதல் ஜோடி திருவட்டார் காவல் நிலையத்துக்கு வந்தனர். பொலீசார் அட்வின் சார்மியின் பெற்றோரை வரவழைத்தனர். இரு வாரத்தில் காதல் கசந்ததால் பெற்றோருடன்தான் செல்வேன் என அட்வின்சார்மி தெரிவித்தார்.
ஆனால் அவரது பெற்றோர் ‘இனி இவளுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் இல்லை’ என கூறி விட்டனர். இதனால் அட்வின் சார்மி அழுது கொண்டே தனது காதலுடன் சென்றார்.
‘கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோரை மதிக்காமல் சென்ற பெண்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்’ எனக்கூறி அட்வின்சார்மியின் பெற்றோர் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by

Leave a comment