சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் 15 ஊழியர்களது விபரங்கள்

pramila malay– AF-90

கோலாலம்பூர்: உக்ரைன்- ரஷ்ய எல்லைப் பகுதியில் புரட்சிப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணியாற்றிய 15 ஊழியர்களின் விபரங்களை சீன மொழியில் வெளியாகும் மலேசிய நாளிதழ் வெளியிட்டிருக்கின்றது.

‘சின் சியூ’ நாளிதழ் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணித்த 15 ஊழியர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அவர்களைப் பற்றிய விவரத்தையும் அது கூறியுள்ளது.

pramila malay
பிரமீளா ராஜேந்திரன் (30)

பிரமீளா ராஜேந்திரன் என்ற 30 வயதுப் பெண் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றியுள்ளார். அவரும் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவு நனவாகி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியவர் பிரமீளா என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளனர்.

caption
வான் அமர்ன் பின் வான் ஹூசேன் (50)

இந்த விமானத்தில் 50 வயதான வான் அமர்ன் பின் வான் ஹூசேன், 45 வயதான ஈஜின் சூ ஜின் லியோங் ஆகியோர் கெப்டன்களாகப் பணியில் இருந்துள்ளனர். அதேபோல 29 வயதான அகமது ஹக்கிமி பின் ஹனாபி, 27 வயதான முகம்மது பிர்தோஸ் அப்துல் ரஹீம் ஆகியோர் துணை கெப்டன்களாக இருந்துள்ளனர்.

azrina
அஸ்ரினா பிந்தி யாக்கோப் (41)

பிற விமான ஊழியர்கள் – 54 வயது முகம்மது கபார் பின் அபு பக்கர், 47 வயதான பெண் டோரா ஷமீளா பிந்தி காசிம், 41 வயது பெண் அஸ்ரினா பிந்தி யாக்கோப், 42 வயதுப் பெண் லீ ஹூயி பின், 40 வயதுப் பெண் மஸ்தூரா பிந்தி முஸ்தபா, 40 வயதுப் பெண் சோங் யீ பெங், 31 வயதுப் பெண் நூர் சஸானா பி்ந்தி முகம்மது சலே, 44 வயதான ஷேக் முகம்மது நூர் பின் முகம்மது, 42 வயதான பெண் ஹம்சபலின் ஷாம் பிந்தி முகம்மது ஆரிப்பின் ஆகிய விமான சிப்பந்திகளே விமான விபத்தில் கொல்லப்பட்ட 15 ஊழியர்களாவர்.

noor zazan malaysia
நூர் சஸானா பி்ந்தி (31)

 

 

Published by

Leave a comment