யுத்த நிறுத்தத்தின் பின்னரான இஸ்ரேலின் தாக்குதலில் முதலாவது நாளில் மாத்திரம் 44 ஷஹீதுகள் வீழ்ந்தன!

gaza%20deaths_0[1]– MJ

ஜெரூஸலம்: இஸ்ரேலின் மிலேச்சத்தனமான ரொக்கட் தாக்குதல்களின் மூலம் இன்று வெள்ளிக்ழமை மாத்திரம் 44 காஸா மக்கள் ஷஹீதாக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று இரவு இஸ்ரேலின் முதலாவது தாக்குதலில் 4 சிறுவர்கள் ஷஹீதாக்கப்பட்டிருந்தனர்.

பலத்த ஆட்டிலறி, ரொக்கட் லோஞ்சர்கள் மூலம் வான் மூகமாகத் தாக்கி வரும் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் உட்பட 44 ஷஹீகளை இஸ்ரேல் காஸா பூமியில் வீழ்த்தி இருக்கின்றது.

கடந்த பத்து நாட்களாகத் தொடரும் இஸ்ரேலின் மிக மோசமான மனித வேட்டையில் காஸாவில் குடியிருக்கும் 1.8 மில்லியன் மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

gaza%20deaths_0[1]
தனது உறவின் இறுதிப் பயணத்தை தாங்க முடியாமல் கதறியழும் சகோதரர்கள்..

Published by

Leave a comment