10வது வருடமாக ரமலான் நோன்பு இருக்கும் திருமாவளவன்

thiru– AF-90

சென்னை: ரமலான் மாதத்தில் முஸ்லிம்களைப் போன்று நோன்பு இருக்க உள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். வருடந்தோறும் ரமலான் மாதத்தில் 3 நாட்கள் மட்டும் நோன்பு இருப்பது திருமாவளவன் வழக்கம். இந்தாண்டுக்கான நோன்பை நாளை திருமாவளவன் தொடங்குகிறார்.

இது அவர் நோன்பிருக்கும் 10வது ஆண்டாகும். இஸ்லாமிய உலமாக்களுடன் சேர்ந்து தனது நோன்பை துவக்குகிறார்.

ஹோட்டல் அபுபேலஸில் சஹர் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாளை நோன்பு திறப்பு நிகழ்வு சோழிங்கநல்லூர் கைலாஷ் ஹோட்டலில் நடக்கிறது. மூன்றாவது நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் தமீம் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் தெஹ்லான் பாக்கவி, ‘பொப்பியுலர் பிரண்ட்’ தலைவர் இஸ்மாயில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஷபீக்குர் ரஹ்மான் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.

thiru
தொல்.திருமாவளவன்

Published by

Leave a comment