பாம்பாட்டும் படலம்
சந்துபொந்தெல்லாம் கிறுக்கப்படுகிறது
புனைவுகளுக்கு
புள்ளி வைத்து
கோலம் போடவேண்டும் என்பதற்காக
மண்புழுக்களுக்கு
அனஹொண்டா என்றும்.
பட்டாம்பூச்சிகளுக்கு
பருந்து என்றும்.
புள்ளிமான்களுக்கு
புல்டோசர் என்றும்
இன்னும்
கொரில்லாக்கள் மட்டும்
இன்நாட்டின்
சிறந்த குடிமக்கள் என்றும்
கதாபாத்திரங்களுக்கு
கண்
மூக்கு
வாய் வைத்து
வாலும் வரையப்படுகின்றது!
கடுப்பெடுத்து
குறிவிறைத்த
மஞ்சக்கழுதைகள் மட்டும்.
பின்
பசியெடுத்து
மகுடி ஊதி அலைகின்றன
அங்கும் இங்கும்
மண்புழு தேடித்தேடி …
![Donkey[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/07/donkey1.png?w=89&h=150)
![Donkey[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/07/donkey1.png?w=178&h=300)
Leave a comment