காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையம் போராளிகளால் தாக்கப்பட்டிருக்கின்றது.விமான நிலையத்தின் வடக்கு நுழைவாயில் ஊடாக துப்பாக்கிப் பிரயோத்துடன் நுழைந்த போராளிகள் விமான நிலையத்தை தாக்கினர். விமான நிலையத்திற்கு வெளியில் வாகனம் ஒன்றும் தீப்பற்றி எரிவதாக தெரியவருகிறது.
இத்தாக்குதல் காரணமாக காபூல் விமான நிலையத்தின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன், நேர அட்டவணைப்படி வந்துசேரவேண்டிய விமானங்கள் வேறு நகரங் களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.
இத்தாக்குதலில் உயிரிழப்புக்கள் மற்றும் சேத விபரங்கள் இதுவரைக்கும் அறியப்படவில்லை. நேட்டோ படையினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Published by


Leave a comment