இஸ்ரேல்-காஸா பதட்ட நிலை: இன்று 5 மணிநேர யுத்த நிறுத்த உடன்படிக்கை!

israel palestine– MJ

ஜெரூஸலம்: கடந்த 9 நாட்களாக இஸ்ரேல் இராணுவத்தால் தாக்கப்பட்டு வந்த காஸா மக்களின் இனஅழிப்புக்கு பதில் கொடுக்கும் முகமாக காஸாவிலிருந்தும் இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டன. காஸாவிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மூலமாக இஸ்ரேலுக்கு பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படாதிருந்த போதிலும், இஸ்ரேல் பதட்டத்தில் இருக்கின்றது.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் காஸா போராளிகளுக்கிடையில் இன்று 5 மணிநேர யுத்த நிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்டிருக்கின்றது. இதன்படி, உள்ளுர் நேரப்படி காலை 10 மணியிலிருந்து பி.ப 3 மணிவரைக்கும் யுத்த நிறுத்தத்தை இருதரப்பும் கடைப்பிடிக்கின்றது.

இந்த யுத்த நிறுத்தக் கோரிக்கைய இஸ்ரேல் முதலில் முன்வைத்தது. பின்னர் காஸா போராளிகளும் இவ்வுடன்படிக்கைக்கு உடன்பட்டனர்.

இந்த 5 மணிநேர உடன்படிக்கையில், காஸா மக்களைப் பார்க்கிலும், இஸ்ரேல் இராணுவமும் இஸ்ரேல் மக்களுமே அதிக நன்மை அடைவர். இஸ்ரேலிய மக்களுக்கான பாதுகாப்பு, மருத்துவம், மற்றும் இராணுவத்தின் தந்திரங்கள் கையாடல், பாதுகாப்பு பலப்படுத்தல் போன்ற பல சாதகமான விடயங்கள் இஸ்ரேலின் பக்கம் இருக்கின்றன.

ஆனால் தினமும் யுத்த பூமியாகவும், இரத்தக் கடலாகவும் காட்சிதரும் காஸா மக்களுக்கு சாதகங்கள் குறைவாகவே அமையும்.

எப்படி இருந்த போதிலும், புனித ரமழானில் இஸ்ரேலிய எத்தகைய தாக்குதல்களுக்கும் பதிலளிக்க இறைவனின் உதவியால் தயாராகி நிற்கின்றனர் காஸா மக்கள்!

இருந்தும் பி.ப. 3 மணிக்குப்பிறகு என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் உலகம் இருக்கின்றது. எல்லாம் வல்ல இறைவனே காஸா மக்களுக்கு அருள்புரிய வேண்டும். பிராத்தனைகளுடன்…

Published by

Leave a comment