பக்தாத்: ‘இஸிஸ்’ (ISIS) அமைப்பின் உறுப்பினர்களுள் ஒருவரான சவுதி அரேபியாவைச் சேர்ந்த முப்தி அபூ ஒஸாமா அல் கஹ்தானி, ஈராக்கின் ரிக்ரிட் நகரில் அமைந்துள்ள பய்ஜி எனும் ஊரில் ஈராக்கிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.
அல் கஹ்தானி உட்பட மேலும் 4 இஸிஸ் உறுப்பினர்கள் ஈராக்கின் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஸலாடின் மாநிலத்தின் இராணுவ அதிகாரி ஜெனரல் அலி அல் ஃபெரேஜி உறுதிப்படுத்தியிருக்கிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இஸிஸ் அமைப்பின் முக்கிய கூட்டமொன்று பய்ஜி எனும் ஊரில் ஓர் கட்டடமொன்றில் இடம்பெற்று வந்தது. இதனை ஏற்கனவே அறிந்திருந்த ஈராக்கிய இராணுவம், இலக்கு வைத்து, ஈராக்கின் விமானத் தாக்குதல் மூலமாக அல் கஹ்தானி உட்பட மேலும் 4 பேரை தாக்குதல் மூலம் கொன்றுள்ளனர்.
சவுதி அரேபியாவிலிருந்தும் சில இளைஞர்கள் இஸிஸ் அமைப்பில் இணைந்திருக்கின்றனர். இஸிஸ் அமைப்பின் பதிவேற்றப்பட்ட ஒளி வடிவங்களில் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களின் பிரதிபளிப்புக்கள் இருந்து வருவதும் உறுதியாகி இருக்கின்ற நிலையில், சவுதியில் ஓர் முப்தியாக இருந்த அல் கஹ்தானி ஈராக்கில் கொல்லப்பட்டிருக்கின்றார்.
(காப்பகப் படம்)
Published by

Leave a comment