மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு இப்தார் நிகழ்வு

ifthar– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 16-07-2014 இன்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி,மட்டக்களப்பு மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி பாலு மகேந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மனாப்,மட்டக்களப்பு தொழில் நியாய சபைத் தலைவர் சியான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

abdullah judge

இங்கு விஷேட மாரக்க சொற்பொழிவை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் என்.எம்.எம்.அப்துல்லாஹ் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் , மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத் தலைவர் உட்பட அதன் அங்கத்தவர்கள், மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் ,திணைக்களத் தலைவர்கள்’மும்மதப் பெரியார்கள், ஊடகவியலாளர்கள் அரச அதிகாரிகள் வர்த்தக பிரமுகர்கள் உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

ifthar

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் ,மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும்; இணைந்து 16-07-2014 இன்று புதன்கிழமை நடாத்திய தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் 6 வது வருடாந்த இப்தார் நிகழ்வென்பது குறிப்பிடத்தக்கது.

???????????????????????????????

ifthar batti

Published by

Leave a comment