புனித ஆலயத்துக்குள் உணவுகள் எடுத்துவர தடை விதிப்பு!

haram ifthar– MJ

மக்கா: அல்லாஹ்வின் புனித ஆலயமான மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாயலினுள் ரமழான் மாதத்தை முன்னிட்டு இப்தாருக்கு வரும் மக்கள் வெளியிடங்களில் இருந்து எடுத்துவரும் உணவுகள் பள்ளிவாயலுக்குள் கொண்டு செல்ல ஹரம் நிர்வாகம் தடைசெய்துள்ளது. 

இவ்வாறு வெளியிடங்களில் இருந்து கொண்டுவரும் உணவுகளும், அதன் மீதி மற்றும் கழிவுப்பொருட்களும், புனித ஆலயத்தை துப்பரவு செய்யும் ஊழியர்களுக்கு அதிகமான சுமைகளையும், தொந்தரவுகளையும், நேர விரயங்களையும் ஏற்படுத்துவதால், இவ்வாறான உணவுகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.

நோன்பாளிகளுக்கு இப்தார் வேளையில் மாத்திரம் தினமும் மில்லியன் கணக்கான உணவுப் பக்கட்கள் வழங்கப்படுகின்றன. இந்த உணவு தரம்வாய்ந்த அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய வகையில் இருக்கின்றன. எனவே வெளியிடங்களில் இருந்து உணவுகளை கொண்டுவருபவர்கள் பள்ளிவாயலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் ஹரம் நிர்வாகம் தெரிவிக்கிறது.

ஒவ்வொரு இப்தார் வேளையிலும் நன்கு பயிற்றப்பட்ட 500 தொழிலாளர்கள் இப்தார் ஏற்பாடுகளுக்கும், அதன்பின்னரான துப்பரவு பணிக்கும் ஈடுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

haram ifthar

Published by

Leave a comment