கடந்த 9 நாட்களாக காஸா மீது தொடரும் இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலில் இதுவரைக்கும் 220 பேர் பலி!
– MJ
ஜெரூஸலம்: இஸ்ரேலிய இராணுவத்தின் அகோரமான வான்தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் காஸாவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உயிர்கள் 220 யைத் தாண்டியுள்ளன. இஸ்ரேல் காஸா மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கும் போதெல்லாம், மனித உரிமைகள் பற்றிப்பேசும் மேற்கத்தேய ஊடகங்கள் தங்களது கவனத்தை வேறு திசைகளில் திருப்பிக்கொள்ளும்.
மேலத்தேய நாடுகளுக்கு வால் பிடிக்கும் அரபு லீக்கில் அமைந்துள்ள பல நாடுகளும் வாய்மூடிவிடும். இறுதியாக காஸா மக்களும், காஸாவுக்காகப் குரல்கொடுக்கும் உலக முஸ்லிம்களின் அழுத்தங்களாலும் இஸ்ரேல் தற்காலிமாக தனது தாக்குதலை நிறுத்திக் கொள்வதும் வழமையானவை.
இஸரேலின் மிருகத்தனமான இத்தாக்குதல்களில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் 1570 பேர் காயமடைந்தவர்களாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
காஸா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தை
இதற்கிடையில், கடந்த 8ம் திகதியிலிருந்து காஸா போராளிகளால் இஸ்ரேலுக்கு இதுவரையிலும் 1021 ரொக்கட்டுக்கள் ஏவப்பட்டிருக்கின்றன. இவற்றுள் 256 ரொக்கட்டுகளை இஸரேலின் உளவு விமானம் வானில் வெடிக்கவைத்திருக்கிறது.
காஸா மக்கள் போதிய மருத்துவ வசதிகள் இன்றி உயிருக்காகப் போராடி வருகின்றனர். பெண்களும் சிறுவர்களும் அதிகமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இஸ்ரேலின் ஏவுகனைகளும் வான் தாக்குதல்களும் மக்கள் செறிந்துவாழும் குடியிருப்புக்களை நோக்கியே இலக்கு வைக்கப்படுகின்றன.
இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட இப்றாஹீம் ரமடான் அபு டகா எனும் 10 வயதுச் சிறுவன் தனது இறுதியாத்திரைக்கு தயார் படுத்தப்படுகிறான். இச்சிறுவனின் ஜனாஸா கபனிடப்படும்போது…
Leave a comment