எகிப்திய ‘காரி’யின் காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ மஸ்ஜிதுக்கான விஜயம்
– நமது நிருபர்
காத்தான்குடி: புனித றமழான் மாதம் அல்குர்ஆனின் மாதமாகும். இதனை சிறப்பிக்குமுகமாக பல்வேறு நாடுகளிலிருந்தும் பல ‘காரி’ கள் இலங்கைக்கு புனித றமழான் காலங்களில் வருகைதந்து தங்களது இனிமையான குரல்களில் குர்ஆன் வசனங்களை ஓதிகாண்பித்து மஸ்ஜித்களை சிறப்பிப்பதுண்டு.
இவ்வாண்டும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் எகிப்து நாட்டிலிருந்து அஷ்ஷெய்க் றமழான் ஸக்கி முஹம்மத் என்ற ‘காரி’ எமது காத்தான்குடி பகுதிக்கு வருகை தந்து மஸ்ஜித்களில் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்வுளில் சிறப்பித்துக் கொண்டிருக்கின்றார்.
இந்த வகையில் நேற்றிரவு காத்தான்குடி 1 ம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ மஸ்ஜிதுக்கு வருகை தந்த ‘காரி’ அவர்கள் தறாவீஹ் தொழுகையினை நடாத்தியதோடு தறாவீஹ் தொழுகையின் பின்னரான பயான் சொற்பொழிவினையும் நிகழ்த்தினார்.
அறபியிலான பயான் தமிழ் மொழிபெயர்ப்பினை அம்பாறை நகர உதவி பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் TMM. அன்ஸார் (நளீமி) அவர்கள் மேற்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து ‘காரி’ அவர்களால் புனித குர்ஆன் வசனங்களையும் ஓதிக் காட்டியது மிகவும் இனிமையாக இருந்தது.
மேற்படி நிகழ்வுகளில் நிருவாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள் தொழுகைக்கு சமுகமளித்திருந்த ஆண்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காத்தான்குடி 1 ம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்
Leave a comment