300 பேருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நாளை

food rice– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மனிதவள அபிவிருத்திக்கான சர்வதேச அமைப்புடன் இணைந்து ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் மற்றும் அல் மனார் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் றமழான் மாத நோன்பை முன்னிட்டு இலங்கையில் பத்தாயிரம் உலருணவுப் பொதி வழங்கும் திட்டத்தில் காத்தான்குடி கதீப்மார்,இமாம்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில்

கதீப்மார்,பேஷ் இமாம்கள்,முஅத்தின்கள்,முஅல்லிம்கள் அடங்கிய 300 பேருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நாளை 15-07-2014 செவ்வாய்க்கிழமை காலை 10.மணிக்கு காத்தான்குடி அல் மனார் அறவியற் கல்லூரியின் அர் ராஷித் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்வார்.

food rice

Published by

Leave a comment