மக்கா: அல்லாஹ்வின் புனித ஆலயமான மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாயலில் இடம்பெறும் ஐவேளைத் தொழுகைகளை, ஹரத்திற்கு வெளியில் இருக்கும் யாத்திரிகர்களும் மற்றும் பொதுமக்களும் கேட்கும் முகமாக நவீன ஒலிபெருக்கிகளை மக்கா அதிகார சபை தற்பொழுது மக்கா நகரில் பொருத்தியிருக்கிறன்றது.
‘ஹரத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் 4000 தரம்வாய்ந்த நவீன ஒலிபெருக்கிகள் தற்பொழுது பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஒலிபெருக்கிகள் உலக தரவரிசையின் அடிப்படையில் மிகத் தரம்வாய்ந்த (High Quality Sound System) ஒலிபெருக்கிகளைக் கொள்வனவு செய்து மஸ்ஜிதுல் ஹரத்தின் ஒலிவாங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன’.
‘ஹரத்தைச் சூழவுள்ள 9000 மீட்டர் (9KM) சுற்றுவட்டாரத்திற்குள் இருக்கும் அனைத்து இடங்களிலும் உள்ளவர்கள் ஹரத்தின் தொழுகையைக் கேட்க முடியும். அதாவது மக்கா நகரின் காஸா வீதியில் இருந்து இப்றாஹீம் ஹலீல் வீதி வரைக்கும் ஹரத்தின் தொழுகையின் ஒலியைக் கேட்கமுடியும்’.
‘ஹஜ் மற்றும் ரமழான் காலங்களில் ஏற்படும் சன நெருக்கடியில், தங்களின் இடங்களில் இருந்தே ஹரத்தின் தொழுகையை கேட்கக் கூடிய வாய்ப்பும் இருக்கும்’ என்பதாக புனித ஆலயத்தின் அதிகாரி அல் சஆதி தெரிவித்தார்.
‘புழுதிக்காற்று, மற்றும் மோசமான காலநிலைகளிலும் கூட மிகத் தெளிவாக கேட்கும் திறனைக் கொண்ட ஒலிபெருக்கிகளை, தரம் கண்டு, கொள்வனவு செய்து அதனை இணைத்துள்ளோம். ஹரத்திற்கு வெளியேயும் இத்தரம் வாய்ந்த 656 ஒலிபெருக்கிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. என்பதாக சஆதி தெரிவித்தார்.
‘மக்கா மணிக்கூட்டுக் கோபுரத்தில் (Mekkah Clock Tower) ஏற்கனவே இவ்வாறான ஒலிபெருக்கிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கியின் ஒலி 7000 மீட்டர் வரைக்கும் கேட்கும் திறனைக் கொண்டது. அதேபோல் இக்கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள சக்திவாய்ந்த பச்சை மற்றும் வெள்ளை நிற மின்விளக்குகள் 30 கி.மீ வரைக்கும் தெரியக்கூடியது. இதன் காரணமாக தொலைவிலிருப்பவர்கள் புனித ஆலயத்தின் தொழுகை நேரங்களை அறிந்துகொள்ள முடிகிறது’ என்பதாகவும் அல் சஆதி மேலும் தெரிவித்தார்.
Published by


Leave a comment