காத்தான்குடி: நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் செய்துள்ள சிறப்பு ஏற்பாடு தான் (சதகதுல் பித்ர் எனும்) நோன்புப் பெருநாள் தர்மமாகும். இந்த தர்மத்தைக் கூட்டாகவே நிறைவேற்ற வேண்டும். கூட்டாக விநியோகிப்பதுதான் நபிகள் நாயகம் (ஸல்) காலத்து நடைமுறையாக இருந்து வந்தது.
ரமளானின் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3275, 5010
எவ்வளவு கொடுக்க வேண்டும்?
தமது பராமரிப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு அளவு தர்மம் கொடுக்க வேண்டும். ஸாவு என்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு முகத்தல் அளவையாகும். இரண்டு கைகளை இணைத்து வைக்கும் போது எவ்வளவு கொள்ளுமோ அந்த அளவு முத்து எனப்படும். இது போல் நான்கு முத்துக்கள் கொண்ட அளவு ஒரு ஸாவு எனப்படும். அதாவது இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்ளினால் எவ்வளவு வருமோ அது தான் ஒரு ஸாவு எனப்படும். இந்த அளவு அரிசியை அல்லது அதற்கான கிரயத்தை வழங்க வேண்டும். நமது பராமரிப்பில் பத்துப் பேர் இருந்தால் பத்து ஸாவு தர்மம் வழங்க வேண்டும். இரண்டு கைகளாலும் நிரப்பமாக நான்கு தடவைகள் அள்ளும் போது 01 கிலோவும் 750 கிரேமும் அளவீடாக வரும். பெரும்பான்மையானோர் பெருநாள் சமையலுக்காக எடுத்துக் கொள்ளும் ‘சம்பா அரிசி’ யை இந்த அளவீட்டின் படி நோக்கினால் 240 ரூபாய் ஒருவருக்கான நோன்புப் பெருநாள் தர்மமாக வரும்.
ஏழை எளியவர்களுக்கு வழங்கும் இந்த கூட்டு பித்ராவில் தங்களது பங்கைச் சேர்த்துக் கொள்ள சகோதரர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 0776451515, 0778163687
தேசிய தௌஹீத் ஜமாஅத்
காத்தான்குடி
Published by
![sadaqah-al-fitr[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/sadaqah-al-fitr1.jpg?w=100&h=150)
Leave a comment