உள்ளத்தால் போராடுவோம்

TOPSHOTS-PALESTINIAN-ISRAEL-GAZA-CONFLICT– ஆதம்பாவா அஜ்மீர்

உலகக் கிண்ணமும் முடிந்து விட்டது

காஸாவில் இஸ்ரேலின் ஆயுத மழை

இன்னுமே முடியவில்லை

மெஸ்ஸிக்குத்தான் எத்தனை அவதூறு

அவனும் ஒரு வீரனே விளையாட்டில்

போட்டோக்களை எடிட்டிங் செய்யும்

நவீன உலகத்தில் போலி எது மெய் எது

என அறிந்திடாமல் அறிக்கைகள் மட்டும்                                        

குறையவில்லை எம்மவர்களுக்கு!

இன்று கொல்லப்பட்டது போல்

5 வருடங்களுக்கு முன்னருள்ள

காஸா போட்டோக்களையும் பகிர்கின்றனர் நம்மவர்கள்

அதனால்தான் என்னமோ உலகம்

இன்னும் நம்புது இல்லை காஸாவை

புதன ரமழானோ முடியும் தருவாயில்

லைலத்துல் கத்ர் மிக அருகில்

ஏழை எளியோர் எங்கள் கண் முன்னால்

நாங்களோ வேடிக்கையில்

பிரார்த்திப்போம்

எங்கள் உறவுகளுக்கு

போராடுவோம் காஸாவின் விடுதலைக்கு

இன்று அல்லாவிட்டாலும்

என்றோ ஒரு நாள் நிச்சயம் வெல்லும்

எனும் ஈமானின் உறுதியுடன்…

 

 

 

 

Published by

Leave a comment