உன்னால் மட்டும் முடியும் என்பதால்…

TOPSHOTS-PALESTINIAN-ISRAEL-GAZA-CONFLICT– மதியன்பன்

கொடிய பருந்திடம் மாட்டிக் கொண்ட
கோழிக் குஞ்சுகளாய்
இன்று
காஸா முஸ்லிம்கள்
கருவறுக்கப்படுகிறார்கள்..

இஸ்ரேல் நாய்களின்
இரத்தப் பசிக்கு
இஸ்லாமியக் குழந்தைகள்
இரையாக்கப்படுகின்றன.

சொந்த மண்ணிலே அகதிகளாய்
இப்போது
நொந்து போய்க் கிடக்கிறது
நம் சொந்தங்கள்

இருப்பதற்கு
இடம் கொடுத்த பாவம்
இதுவே காஸா மக்களுக்கு
சாபமாய் மாறியிருக்கிறது.

இது ரமளான் மாதம்
நாம்
வானத்தில் பிறை பார்க்கிறோம்
காஸா மக்கள்
வந்து விழும் குண்டுகளையும் செல்களையும்
தவணை முறையில்
தரிசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உணவில்லை, உறக்கமில்லை
இளைப்பாற
இருப்பிடமேதுமில்லை
நின்று நிதானித்துச் செல்ல
நிம்மதியான வாழ்வுமில்லை.

முஸ்லிம்களின்
மூத்திரம் மாத்திரம் போதும்
இஸ்ரேல் நாட்டையே
இல்லாமல் செய்வதற்கு…

தவணை முறையில் அறிக்கை விடும்
தலையாட்டி பொம்மைகளாய்
அரபுலகம்
அடங்கிப் போய் கிடக்கிறது.

அபாபீல் பறவைகளே..!
உங்கள் சின்னச் சொண்டுகளால்
அந்த அற்புதக் கற்களை
அள்ளிக் கொண்டு வாருங்கள்.

இரக்கமற்ற அரக்கர்களின்
இருப்பிடங்களை
இலக்கு வைத்துக் கொட்டுங்கள்
அவர்களின்
இதயங்கள் வெடித்துப் போவதை
எங்கள் விழிகளுக்கு
இறக்குமுன் காட்டிவிடுங்கள்.

சீறிவரும் குண்டுகளால்
சிதறிப் போகும் உடல்கள்
சின்னக் குழந்தைகளின்
உருக்குலைந்த பாகங்கள்
ஓடும் இரத்தத்தை உறைய வைக்கிறது

அவை
வீரத்தாய்களின் விதைகளென்பதை
வீணர்கள்
விரைவிலே உணர்ந்து கொள்வார்கள்.

ஆழக்கூட சக்தியற்று
அழுந்திக் கொண்டிருக்கிறோம்..

ஆண்டவனே..!
காஸா மக்களுக்கு
உன் கருணையைக் காட்டிவிடு…!

உன்னிடம் மாத்திரமே கேட்கிறோம்
ஏனென்றரால்
உன்னால் மட்டும் முடியும் என்பதால்..

 

 

 

 

 

 

 

Published by

Leave a comment