இளைஞர் கழக மாவட்ட சம்மேளன நிருவாக குழு பிரதி நிதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி

training– பழுலுல்லாஹ் பர்ஹான்

பட்டங்கல: இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும்,தேசிய இளைஞர்கழக சம்மேளனமும் ஒன்றிணைந்து நடாத்திய இளைஞர் கழக மாவட்ட சம்மேளன நிருவாக குழு பிரதி நிதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பட்டங்கல பயிற்சி நிலையத்தில் அண்மையில் இடம் பெற்றது.

இப்பயிற்சி நெறிக்காக இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவர்,உப தலைவர்,உபசெயலாளர்,பொருளாளர், அமைப்பாளர்,உப அமைப்பாளர் என்ற அடிப்படையில் பிரதி நிதிகள் கலந்து கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருத்தனர்.

மூன்று நாட்களை கொண்ட இப்பயிற்சி நெறியின் போது வெளிகள செயற்பாடுகள் மற்றும் உடற்பயிற்சிகள், தலைமைத்துவ பண்புகள் மற்றும் தலைமைத்துவம் மற்றும் ஆளுமை அபிவிருத்தி,தேசிய இளைஞர் கொள்கை தொடர்பான விளக்கம் மற்றும் அறிக்கை முகாமைத்துவம் தொடர்பாக விரிவுரைகளும் வழங்கப்பட்டதுடன் இளைஞர் கழகங்கள் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலத்;துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

training

meeting

training

Published by

Leave a comment