திருகோணமலை: திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் 10வது ஆண்டு நிறைவு விழாவும் ஊடகவியலாளர் கௌரவிப்பும 12.07.2014 சனிக்கிழமை திருகோணமலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் மூத்த, சிரேஷ்ட, கனிஷ்ட, இளம் ஊடகவியலாளர்கள் என நான்கு பிரிவுகளாக விருது வழங்கி 60 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமான் லெப்பை, மாகாணசபை தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி, மாகாண சபை எதிர் கட்சி தலைலவர் சி.தண்டாயுதபாணி, மாகாணசபை உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், பிரியன்த பத்திரன, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் பரசுராமன், கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் கலாநிதி வர்ணகுலேந்திரன், திருகோணமலை நகர, பிரதேச சபை தவிசாளர், மூதூர் பிரதேசபை தவிசாளர் மற்றும் ஊடகவியலாளர்களின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment