காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஆண்களுக்கான விசேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வினைத் தொடர்ந்து இன்று பெண்களுக்கான நிகழ்வும் காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைத்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையாக மக்கள் அரங்கில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
PMGGயின் சூறாசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் நளீமி தலைமை தாங்கி விஷேட உரையாற்றினார்.
இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபையின் பெண்கள் பிரிவினர், பெண் செயற்குழு உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் உட்பட சுமார் 850ற்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
மேற்படி இப்தார் தொடர்பில் ஏற்பாடுகளில் சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
Published by

Leave a comment