‘பலஸ்தீனர்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுங்கள்’- இஸ்ரேல்

Wounded Palestinian children are seen in a hospital in the northern Gaza Strip, after an Israeli air strikeடெல் அவிவ்: காசாவின் வடக்கே வாழும் பலஸ்தீனர்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுங்கள் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. உள்ளூர் நேரப்படி நன்பகலுக்குப் பின்னர் அப்பகுதியில் கூடுதலான வான் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தலாம் என்று தெரிகிறது.

இஸ்ரேலிய கடற்படை கமாண்டோக்கள் நிலம் வழியாக காசாவுக்குள் நுழைந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

தற்போதைய தாக்குதல்கள் ஆரம்பித்ததன் பின்னர் நிலம் வழியாக இஸ்ரேலிய துருப்புகள் காசாவுக்குள் நுழைந்திருப்பது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.

காசாவில் ஏவுகணை வீசுவதற்கு பயன்படுத்தப்பட்டுவந்த ஒரு இடத்தின் மீது தாக்குதல் நடத்திய வேளையில் தமது துருப்பினர் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.

ஆனால் தாக்க வந்தவர்கள் திரும்பிப்போகவே இல்லை என்று ஹமாஸ் கூறுகிறது.

இதனிடையே காசாவில் சனிக்கிழமை இரவும் இஸ்ரேலிய வான் தாக்குதலால் நீடித்தன. அதில் ஒரு தாக்குதலில் பலஸ்தீன பொலிஸ்துறை தலைவரின் வீட்டில் குண்டு விழுந்து பதினேழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

டெல் அவிவ் உள்ளிட்ட இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் ரொக்கெட் தாக்குதலை நடத்திவருகிறது. ஒருவார காலமாக நடந்துவருகின்ற சண்டையில் பாலஸ்தீனர்கள் 170 பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர்.

Published by

Leave a comment