சாய்ந்தமருது: இரு சிறுநீரகங்களும் செயலிழந்து தவிக்கும் சகோதரி ஒருவர் இரக்க உள்ளம் கொண்டவர்களிடம் உதவி கோரி நிற்கின்றார். சாய்ந்தமருது மாவடி வீதியை சேர்ந்த AM. ஜவாஹிறா எனும் பெண்ணுக்கு கடந்த ஒன்பது மாதங்களாக இரு சிறுநீரகங்களும் முற்றாக செயலிழந்து மிகவும் பேராபத்தான நிலையில் கண்டி மற்றும் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரண்டு சிறுநீரகத்தில் ஒன்றையாவது உடனே மாற்ற வேண்டும்; அதற்கு குறைந்தது 25 இலட்சம் தேவைப்படும் என்று இவரை பரிசோதனை செய்த வைத்தியர் சொல்கிறார்.
இவரோ மூன்று குழந்தைகளின் தாய்.இத்தனை பணத்திற்கு எங்கே செல்வது என்ற நிலையில், நோயினாலும் மன உளைச்சலினாலும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்கிறார்.
‘கருணை உள்ளம் படைத்தவர்களே! செல்வந்தர்களே! இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியும் என் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யும் படி வேண்டி நிற்கிறேன்’ என்று ஜவாஹிறா உருக்கமான வேண்டுகோள் விடுக்கிறார்.
தொடர்புகளுக்கு: 0094 758789175
Abdul Mjeed Jawahira,
A/C NO: 338200110004681
Pople’s Bank, Sainthamaruthu.
Published by



Leave a comment