ஆர்ஜன்டீனா-ஜேர்மனி உலகக் கிண்ண இறுதிப்போட்டி: ஓர் வரலாற்று அலசல்
– SHM
றியோ: ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதிப் போட்டியில் ரசிகர்களுக்கு பிடித்த பிரேசில் அணி தோல்வி அடைந்தது. இன்று 13ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் ஜேர்மனி ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த உலகக் கோப்பையில் ஆர்ஜென்டினா, தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஜெர்மனி அணி ஒரு போட்டியை சமன் செய்துள்ளது.
‘எஸ்டடியோ டோ மரகானா’ மைதானத்தில்இறுதிப் போட்டி நடக்கிறது. 1950ம் ஆண்டிற்கு பிறகு தற்போது தான் மரகானாவில் இறுதிப் போட்டி நடக்கிறது. அந்த மைதானத்தில் 76 ஆயிரத்து 935 பேர் அமரலாம்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 210 கோடியும், தோல்வி அடையும் அணிக்கு ரூ. 150 கோடியும் பரிசாக வழங்கப்படும்.
இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா, ஜேர்மனி அணிகள் மோதுவது இது மூன்றாவது முறை ஆகும். 1986ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை அர்ஜென்டினா தோற்கடித்தது. 1990ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை ஜேர்மனி தோற்கடித்தது.
1954, 1974 மற்றும் 1990 என ஜேர்மனி மூன்று முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. 1978 மற்றும் 1986 என இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது ஆர்ஜென்டினா.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவது இது ஆர்ஜென்டினாவுக்கு 5வது முறை, ஜேர்மனிக்கு 8வது முறை ஆகும்.
இந்த போட்டியில் ஜேர்மனி வெற்றி பெற்றால் பிரேசில்(5 – 1958, 1962, 1970, 1994, 2002), இத்தாலியை (4 – 1934,1938, 1982, 2006) அடுத்து அதிக முறை உலகக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை பெறும்.
24 ஆண்டுகள் கழித்து ஆர்ஜென்டினா அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.
World Cup-1990
வெளிநாட்டு பயிற்சியாளரை கொண்ட எந்த ஒரு அணியும் இதுவரை உலகக் கோப்பையை வென்றது இல்லை.
ஆர்ஜென்டினா (சபெல்லா) மற்றும் ஜேர்மனி (ஜோக்கிம்) அணிகளின் பயிற்சியாளர்கள் அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment