உலகில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது நெதர்லாந்து: சொந்த மண்ணில் பிரேசில் மீண்டும் தோல்வி!

netherland– MJ 

பிரேசிலியா: சற்று முன்னர் நிறைவடைந்த உலகக் கிண்ணத் தொடரின் மூன்றாவது இடத்தை தேர்வு செய்யும் போட்டியில் பிரேசில் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் நெதர்லாந்து 3:0 எனும் கோல் வித்தியாசத்தில் பிரேசிலை வென்று 3வது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

நெதர்லாந்து சார்பாக வெண் பேர்சி மற்றும் டி. Bபிளைண்ட் ஆகியோர் தலா ஒரு கோலைப் போட்டு நெதர்லாந்தின் வெற்றிக்கு வழிசமைத்தனர். இந்த இரு கோல்களும் போட்டி ஆரம்பித்த 16 நிமிடங்களுக்குள் போடப்பட்டன. 3வது கோல் போட்டியின் 91வது நிமிடத்தில் விஜினால்டம் எனும் வீரரால் போடப்பட்டது.

அரையிறுதிப்போட்டியில் ஜேர்மனியிடம் 7:1 எனும் கோல் அடிப்படையில் படுதோல்வியடைந்த பிரேசில், இப்போட்டியிலும் சொந்த மண்ணில் மீண்டும் தோல்வியைச் சந்தித்திருக்கின்றது.

இதன் காரணமாக உலகக் கிண்ணத்தை வெல்லும் என எதிர்பார்த்திருந்த பிரேசில் 3வது இடத்தையும் பெறமுடியாமல் தோல்வியைத் தழுவியுள்ளமை பிரேசில் இரசிகர்களை பெரிதளவில் பாதித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

brazil

netherland

Published by

Leave a comment