தேசிய ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு

image-93– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: 03-08-1990 ஆண்டு காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் மஸ்ஜிதுல் ஹூசைனியா பள்ளிவாயல்களில் 103 முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்ட வேளையில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட பின்னர் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் தேசிய ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின்

ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஸன் நிறுவனத்தின் அனுசரனையுடன் மாபெரும் இப்தார்  நிகழ்வு 11-07-2014  வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி-01 – ஷூஹதாக்கள் முன்றலில் இடம்பெற்றது.

தேசிய ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் தலைவர் கே.எல்.எம்.பரீட் ஜேபி தலைமையில் இடம்பெற்ற இம் மாபெரும் இப்தார் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

image-93

இங்கு றமழான் தொடர்பான விஷேட மார்க்க சொற்பொழிவை அஷ்ஷெய்க் எம்.ரி.எம்.சப்ரி (நளீமி) நிகழ்த்தினார்.

800க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இம்மாபெரும் இப்தார் நிகழ்வில் தேசிய ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டாளர் றுஸ்வின், செயலாளர் நாஸர்,பொருளாளர் றிஸ்வி உட்பட உலமாக்கள் , ஊர் பிரமுகர்கள் ,புத்திஜீவிகள் பெரும் திரளான பொது மக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

image-5

??????????

??????????

Published by

Leave a comment