காஸா பள்ளிவாயலும் தாக்கப்பட்டது. இதுவரைக்கும் 120 பேர் பலி! 920 பேர் காயம்!!

gaza– MJ

காஸா: இன்று இஸ்ரேலால் ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் காஸாவின் பள்ளிவாயல் தாக்கப்பட்டது. இத்தாக்குதலில் இரு பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக இதவரைக்கும் 700 ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக காஸா இராணுவம் கூறுகிறது.

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான இத்தாக்குதல்களில் 120 காஸா பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 920 பேர் காயப்பட்டிருக்கின்றனர். காயப்பட்டவர்கள் என்பது சிறுகாயங்களைக் கருதமாட்டாது. கால்-கைகள் உட்பட உடற்பாகங்கள் சிதைந்தும் உயிருக்காக மருத்துவமனையில் போராடுபவர்களே காயப்பட்டவர்கள் என காஸா நிலைமை உறுதிப்படுத்துகிறது.

தரைமார்க்கமாக காஸாவுக்குள் கால்வைக்க முடியாமல், காஸா சிறுவர்களின் கல் வீச்சுக்கு புறமுதுகு காட்டி ஓடும் இஸ்ரேலிய இராணுவத்தினர், வான் தாக்குதல்களை இலக்குவைத்தே அப்பாவி காஸா மக்களை வேட்டையாடி வருகின்றனர்.

இஸ்ரேலின் ‘டார்கட்’ என்னவோ, அதனை இஸ்ரேல் செய்துவிட்டு மௌனமாகிவிடும். கொதித்த மக்களும் மௌனமாகி விடுவார்கள். முஸ்லிம் நாடுகளும் உறங்கிவிடும். இதைத்தான் இஸ்ரேலுக்கு ஆதரவான உலக நாடுகளும் எதிர்பார்த்திருக்கின்றன. அதனால்தான் இஸ்ரேலின் தாக்குதல்களை வல்லரசு நாடுகள் கணக்கெடுப்பதில்லை.

gaza

Published by

Leave a comment