இலங்கை மண்ணில் முதற்தடவையாக தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா!

sa– MJ 

ஹம்பாந்தோட்டை: இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ மைதானத்தில் இடம்பெற்ற 3வதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 2:1 என கைப்பற்றியுள்ளது.

தென்னாபிரிக்கா சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டி கொக் மற்றும் அணித் தலைவர் டி வில்லியர்ஸ் ஆகியோர் சதங்களைப் பெற்றனர். இலங்கை சார்பாக எவரும் சிறந்த துடுப்பாட்டத்தை மேற்கொள்ளவில்லை.

இந்த வெற்றி, தென்னாபிரிக்காவுக்கு வரலாற்று வெற்றியாக அமைகிறது. இலங்கை மண்ணில் இதற்கு முன்னர் தென்னாபிரிக்கா எந்தவொரு தொடரையும் வெற்றிபெறவில்லை. இது தென்னாபிரிக்கா இலங்கை மண்ணில் வெற்றிபெறும் முதலாவது தொடர்வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

sa

Published by

Leave a comment