கொழும்பு: 15 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான 5 ஆயிரம் ரூபா போலி நோட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி நோட்டுகளுடன் அவற்றை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
5 ஆயிரம் ரூபா போலி நோட்டுடன் பம்பலபிட்டி பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் சி. ஐ. டி. யினரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவரிடம் இருந்து கிடைத்த தகவலின்படி மேலும் 3 ஐயாயிரம் ரூபா போலி நோட்டுகள் 3 மீட்கப்பட்டன.
மேலும் கிடைத்த தகவலின் பிரகாரம் களுபோவில வர்த்தக நிலையமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி ஐயாயிரம் ரூபா நோட்டுகள் 100 கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் அளுத்கமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதேவேளை போலி நாணயத் தாள் அச்சிடும் கும்பலுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் தெமடகொட பகுதியில் வைத்து சி. ஐ. டி. யினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 200 மீட்கப்பட்டன. சந்தேக நபர்கள் நேற்று அளுத்கம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
Published by


Leave a comment