புனித ரமழான் ‘இஸ்லாமியப் பொது அறிவு’ சிறப்புப் போட்டிகள்!!

K-Tic Ramadhan Quiz 1435 2– K-TIC

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…

குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-TIC), இந்த ஆண்டு (2014 / 1435) நடைபெறும் புனித ரமழான் மாத சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக குவைத் வாழ் தமிழ் மக்களுக்காக ‘இஸ்லாமியப் பொது அறிவு போட்டி’யையும், சங்கத்தின் பத்தாம் ஆண்டு நிகழ்ச்சிகளின் முன்னோட்டமாக

நமது சங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பிற அமைப்புகள் வாயிலாக வரவழைக்கப்பட்டு, நமது பள்ளிவாசலில் சிறப்புரையாற்றிய பெருமக்கள் ஆகியோரை நினைவூட்டும் விதமாக’யார்? எப்போழுது? இங்கே!’ என்ற தலைப்பிலான சிறப்புப் போட்டியையும் ஏற்பாடு செய்துள்ளது.

விதிமுறைகள்:

சங்கத்தின் முதன்மை நிர்வாகிகளை தவிர்த்து ஏனைய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் குவைத் வாழ் தமிழ் மொழி பேசும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

ஒருவர் ஒரு படிவத்தை மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும்.

விடைத்தாள் படிவத்தில் சரியான விடையை ‘டிக்’ & பூர்த்தி செய்ய வேண்டும்.

K-TIC தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலில் உள்ள பெட்டியில் மட்டுமே பூர்த்தி செய்த படிவத்தை போடவேண்டும்.

K-TIC  தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,

அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) மஸ்ஜித், 
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில்,
ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில், ஃகைத்தான்.

அனைத்து வினாக்களுக்கும் சரியாக விடையளித்து, கீழே உள்ள தகவல் படிவத்தினையும் முழுமையாக பூர்த்தி செய்தவர் மட்டுமே பரிசு பெற தகுதியுடையவர் ஆவார்.

சரியான விடையெழுதுபவர்களில் ஆண்களில் மூவரும், பெண்களில் மூவரும் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

கடைசி நாள் : நோன்புப் பெருநாள் இரவு வரை…

முடிவுகள் அறிவிப்பு & பரிசுகள் வழங்கும் நாள் : பின்னர் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்…

மேலதிக விபரங்கள் இணைப்பில்…

K-Tic Ramadhan Quiz 1435 2

K-Tic Ramadhan Quiz 1435 1

Published by

Leave a comment