காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு மார்க்கப் பிரச்சாரக் பணிகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில்; ஆண்கள் ,பெண்களுக்கான விஷேட இப்தார் நிகழ்வு புதிய காத்தான்குடி -02 ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயலில் 11-07-2014 இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
காத்தான்குடி தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ. ரவூப் தலைமையில் இடம்பெற்ற விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் கலந்து கொண்டு தங்களது நோன்புகனை திறந்தனர்.
இதன் போது றமழான் தொடர்பான விஷேட மார்க்க சொற்பொழிவை பிரபல மார்க்க பிரச்சாரகர் அஷ்ஷேய்க் எஸ்.எம்.அப்துல் ஹமீட் (ஷரயி) நிகழ்த்தினார்.
குறித்த தாருல் அதர் அத்த அவிய்யா அமைப்பு இரத்த தானம்,சிரமதானம் போன்ற பல்வேறு சமூகப் பணிகளையும், மார்க்கப் பிரச்சாரக் பணிகளையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by





Leave a comment